சென்னை: தமிழகத்தில் மதுரை, திருப்பூர் மற்றும் சென்னையில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 467 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் பலியாகி உள்ளனர். 34 பேர் குணமாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று(மார்ச் 23) மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை, திருச்சி நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: தமிழகத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சென்னை - புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது நபருக்கும், திருப்பூரை சேர்ந்த 48 வயது நபருக்கும், மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயது நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மதுரை, திருப்பூரிலும் பரவியது கொரோனா